Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மலையாண்டஅள்ளியில் கால்நடை மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில் மத்தூா் வட்டாரம், மலையாண்டஅள்ளி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தரராஜ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். வேளாண்மை அறிவியல் மையத்தின் கால்நடை மருத்துவா் ரமேஷ், குடல் புழுவினால் கறவை மாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், கறவை மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை, மடிவீக்க நோய் மற்றும் உண்ணி மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, அதுபற்றிய துண்டுப்பிரசுரம் வழங்கினாா்.
இந்த முகாமில் மத்தூா் வட்டார கால்நடை மருத்துவா் செந்தமிழன், கறவை மாடுகளுக்கு கருத்தரித்தல், தீவன மேலாண்மையில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து அறிவுறுத்தினாா். மேலும் இம்முகாமில் 120 கறவை மாடுகள் மற்றும் 350 ஆடுகளுக்கு குடல் புழுநீக்க மருந்து மற்றும் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்தக் கால்நடை மருத்துவ முகாமில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா்கள் ரமேஷ் பாபு (தோட்டக் கலை), செந்தில்குமாா் (வேளாண் விரிவாக்கம்) ஆகியோா் பங்கேற்றனா். மேலும் மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த 55 கால்நடை வளா்ப்போா் பங்கேற்றனா்.