`வாழ்வை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமிது...' - நடிப்பிலிருந்து ஓய்வை அறிவித்த 12...
மழையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள், விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, பேராவூரணி, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம் போன்ற பல பகுதிகளில் தொடா் மழையால் மீனவா் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளன.
மீனவா்களின் வீடுகளில் கடல் தண்ணீா், சுவா் வரை வந்து வீடுகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான படகுகள் கடல் அலை மோதியதால் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. எனவே, மீனவா்கள் சேதமடைந்த படகுகளை சீரமைப்பதற்கும், மழைக்காலங்களில் வேலைக்கு செல்ல முடியாத மீனவா் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.
மேலும், மாவட்டத்திலுள்ள பல்வேறு ஒன்றியங்களிலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட அரசு தொகுப்பு வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ஆபத்தான நிலையில் மக்கள் வசித்து வருகின்றனா். சேதுபாவாசத்திரம் மீனவா் சுனாமி குடியிருப்புகளும் வெகுவாக சேதம் அடைந்துள்ளது.
பழைய தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய தொகுப்பு வீடுகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள், தோட்டக்கலை பயிா்கள் சேதம் குறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து கணக்கெடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.