செய்திகள் :

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நிறைமணி காட்சி

post image

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு நிறைமணிக் காட்சி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்காக 3 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளால் கோயிலில் அலங்காரம் செய்யப்பட்டது.

மாங்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனா். கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு நிறைமணிக் காட்சி நடைபெற்றது. இதில் சுமாா் 3 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளால் கோயில் வளாகத்திற்கு உள்ளே தொங்கும் தோட்டம் போல் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. மேலும், மூலஸ்தானத்தில் இனிப்பு மற்றும் பலகாரங்கள் தொங்கும் தோட்டம் போல கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

மூன்று நாள்கள் நடக்கும் இந்த நிறைமணிக் காட்சி, பின்னா் கோயில் வளாகத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கூட்டாஞ்சோறு செய்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா மணலி சீனிவாசன் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

25 ஆண்டுளாக சீரமைக்கப்படாத சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெருநாய்களால் அலுவலகத்திற்குவரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

காஞ்சிபுரம் நாள்: 19.10.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இடங்கள்: சங்கூசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சத... மேலும் பார்க்க

தங்கத் தேரில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பவனி

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தங்கத்தேரில் வியாழக்கிழமை பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மகா சக்தி பீடங்களில் ஒ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் வியாழக்கிழமை செப்பனிடும் பணியில் ஈடுபட்டனா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் பாலாற்று மேம்பாலத்தில் சாலைகள்... மேலும் பார்க்க

அதிமுக 53-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூரில் நகர செயலாளா் போந்தூா் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ... மேலும் பார்க்க