செய்திகள் :

மாசுபாட்டை குறைக்கும் "பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு: மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபர்

பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

42-ஆவது போக்குவரத்து மேம்பாட்டுக் குழு மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் தில்லியில் இருநாள்கள் (ஜன.6, 7) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாட்டின் சாலைப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், தீர்வுகள், எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல் நாளில் அனைத்து அரசு அதிகாரிகளுடனான பயிலரங்கு நடைபெற்றது.

இரண்டாம் நாளில் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், தமிழக போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் சிவகுமரன், இணை ஆணையர்கள் நெல்லையப்பன், கே.சந்திரசேகர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர், சில முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

42-ஆவது போக்குவரத்து மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் சாலைப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை முன்னோக்கி நகர்த்த உதவும் வகையில் பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் குறிப்பிட்ட நடவடிக்கைகள் சீரமைக்கப்பட முடிவு எடுக்கப்பட்டது. நிலையான போக்குவரத்து முறையில், பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையை விரைவாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

ஓட்டுநர் பயிற்சி, வாகனங்களுக்கான தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏடிஎஸ்) அமைத்தல் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்த மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. வாகனப் பாதுகாப்பில் தணிக்கைத் தேவைகளை தரப்படுத்துதல் போன்றவையும் விவாதிக்கப்பட்டு சில யோசனைகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் பியுசிசி 2.0 என்கிற மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை வழங்குவதற்கான மென்பொருள் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளவும் அதை மாநிலங்கள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்யப்பட்டதோடு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாசுபாட்டைக் குறைக்க ஈரோ-7-க்கு சமமாக இந்தியாவில் வாகனங்களுக்காக முன்மொழியப்பட்ட உமிழ்வு தரநிலை பிஎஸ்-7 புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இரவு நேரங்களில் விபத்துகளைத் தவிர்க்க பிரதிபலிப்பு நாடாக்களை கட்டாயமாக்குவது, சாலைப் பாதுகாப்பு மீறல்களில் இ-சலான் வழங்க ஏடிஎம்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.

அரசுக் கிடங்கில் கெட்டுப்போன தானியம்! ம.பி. மக்கள் ஒரு மாதம் சாப்பிட்டிருக்கலாம்!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு உணவளிக்கும் அளவிலான தானியங்கள், அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.இது கெட்டுப்போனதால், கால்நடைத் தீவனமாகக... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என... மேலும் பார்க்க

திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது?

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்... மேலும் பார்க்க

பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?

தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டு... மேலும் பார்க்க

எதிர்காலம் போர் அல்ல, அமைதிதான்: பிரதமர் மோடி

இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது, எதிர்காலம் போரில் இல்லை அமைதியில்தான் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முதல்.. எம்எல்ஏ வரை.. மாத ஊதியம் எவ்வளவு?

புது தில்லி: ஒரு தனி மனித வாழ்க்கையில் ஊதியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது, அது தினக்கூலியாகவோ, மாத ஊதியமாகவோ, தொழில் லாபமாகவோ, முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டியாகவோ இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாத... மேலும் பார்க்க