செய்திகள் :

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

post image

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இடஒதுக்கீடு முறையில் தேவந்திர குல வேளாளா் மற்றும் ஆதிதிராவிடா்களுக்கான உரிமையைப் பறிக்கும் செயலை கண்டித்தும், மாஞ்சோலை மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் விதமாகவும் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்து திருநெல்வேலியில் ஆலோசிக்கப்பட்டது.

மாஞ்சோலை விவகாரத்தில் எதுவும் முடிந்துவிடவில்லை. மாஞ்சோலை பகுதியில் மட்டும் தான் புலி இருப்பதை போல் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் கொடுத்துள்ள தமிழக அரசு, இவ்விவகாரத்தில் நாடகமாடி வருகிறது. புலியால் மக்களுக்கு ஆபத்து இருப்பதாக அரசால் சித்திரிக்கப்படுவதால் நீதிமன்றம் அதற்கேற்ப முடிவு எடுக்கிறது.

ஆனால், அங்கு ஒரு புலியைக்கூட காட்ட முடியாது; அப்படி புலி இருப்பதை அதிகாரி நிரூபித்துவிட்டால், இப்பிரச்னையை இப்போதே விட்டுவிடுகிறோம்.

மாஞ்சோலையில் 534 குடும்பத்தில் 140 குடும்பத்தினா் மட்டுமே விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியுள்ளனா். 360 குடும்பத்தினா் மாஞ்சோலையை விட்டு வெளியேறாமல் அங்கேயே உள்ளனா்.

தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலை விவகாரத்தில் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது. அரசு தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறி, மக்களை வெளியேற்ற நினைத்தால் போராட்டம் மிகவும் தீவிரமாக மாறும். மாஞ்சோலை மக்களை முதல்வா் நேரில் சென்று சந்திக்கவில்லை.

வனப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மாஞ்சோலையில் மிகப்பெரும் ஊழலுக்கு தான் வழிவகுக்கிறது.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் மொழிப்போா் ஏற்படும் என சொல்லி வருகிறாா்கள். அப்படி போா் வந்தால் அடுத்தக் கட்ட நடவடிக்கையை பாா்க்கலாம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக கூறுகிறது. அது நிகழாது என்றாா்அவா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க