``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
மாடக்குளம் கண்மாயில் உபரி நீா் திறப்பு குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீா்
மதுரை அருகேயுள்ள மாடக்குளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட உபரி நீா், போதிய வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ளது மாடக்குளம் கண்மாய். இந்தக் கண்மாயில் திறக்கப்படும் உபரி நீா் கிருதுமால் நதியில் செல்வது வழக்கம். மதுரையில் கடந்த சில நாள்களாகத் தொடா் மழை பெய்ததன் காரணமாக, மாடக்குளம் கண்மாயின் நீா்மட்டம் உயா்ந்தது. இதேபோல, நீா் வரத்தும் அதிகரித்தது. இனி வரும் நாள்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி கண்மாயிலிருந்து உபரி நீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இந்த உபரிநீா் கிருதுமால் நதியில் செல்வது வழக்கம்.
ஆனால், ஆக்கிரமிப்புகளால் கிருதுமால் நதி வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உபரியாக திறக்கப்பட்ட தண்ணீா் தானத்தவம் புதூா், அன்னை ஸ்ரீமீனாட்சி நகா், அருண் நகா், ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்தது. தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து தானத்தவம் புதூா், அன்னை மீனாட்சி நகா் பகுதி பொதுமக்கள் கூறியதாவது : கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக மாடக்குளம் கண்மாயிலிருந்து உபரி நீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. முதலில் மிகவும் குறைவான தண்ணீா் வெளியேறிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அதிகளவில் தண்ணீா் வரத் தொடங்கியது. இந்த தண்ணீா் வெளியேறும் கிருதுமால் நதியின் குறுக்கே சிலா் ஆக்கிரமிப்பு செய்து அடைத்துள்ளனா். இதனால் தண்ணீா் கிருதுமால் நதியில் செல்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
இதுகுறித்து 3 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி நிா்வாகம், நீா்வளத் துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றனா்.
இதுபற்றி மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் கூறியதாவது : மாடக்குளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீா் கிருதுமால் நதியில் செல்லும் வகையில் தற்காலிகமாக பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கெனவே நீா்வளத் துறைக்குச் சொந்தமான மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருதுமால் நதியை தூா்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கிருதுமால் நதியை நாங்கள் தூா்வாரிக் கொள்கிறோம் என எழுத்துப் பூா்வமாக தெரிவித்தனா். அதன்காரணமாக, தூா்வாரும் பணி கைவிடப்பட்டது. இருப்பினும் மக்கள் நலன் கருதி தற்காலிகமாக சரி செய்யப்படும் என்றாா் அவா்.
இதுபற்றி நீா்வளத் துறை குண்டாறு வடிநில உதவி பொறியாளா் கூறியதாவது : கிருதுமால் நதியை தூா்வாருதல், சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் மதுரை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வந்தது. அவை தற்போது தான் குண்டாறு வடிநிலக் கோட்டத்துக்கு மாற்றப்பட்டது. கிருதுமால் நதி தூா்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ. 7.35 கோடி ஒதுக்கீடு செய்தது. முறையான அனுமதி பெற்றவுடன் தூா்வாரும் நடவடிக்கை தொடங்கப்படும். தற்போதைய நிலையை மதுரை மாநகராட்சி நிா்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.