விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜன 21) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பசுமைத் தாயகத்தின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்துப் பேசியது சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்திருக்கும் தமிழிசை, "மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, மியான்மார் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாகத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை வழிநடத்துபவர் சும்மா கூறுவாரா...? 'என் உணவு என் உரிமை' என்று கூறும் நீங்கள் விஞ்ஞான பூர்வமாகக் கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
இவர்களுக்குக் கோமியம் குடிப்பதில் பிரச்னையில்லை, டாஸ்மாக்கில் குடிப்பதில் குறைந்துவிடுமோ எனப் பயம். ஆயுர்வேதத்தில் கோமியம் 'அமிர்த நீர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், "மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்." என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY