உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி
மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், விடுதிக் காப்பாளர் சரண் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக சைல்ட் ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைத்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதில், விடுதிக் காப்பாளரான சரண், 18 மாணவர்களை மிரட்டி கட்டாயப்படுத்தி தன்பாலின உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, விடுதிக் காப்பாளரான சரணை போக்சோ கட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தெரிந்தும் அதை மறைத்த பள்ளித் தாளாளரான சுரேஷ்குமார், தலைமை விடுதிக் காப்பாளர் ராம் பிரபு ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தாராபுரம் போலீஸார் கூறுகையில், "விடுதிக் காப்பாளரான சரண் கடந்த மூன்று மாதங்களாக மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் பள்ளித் தாளாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமைக் காப்பாளர் ராம்பிரபுவிடம் புகார் அளித்துள்ளனர். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று மாணவர்களை பள்ளித் தாளாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமைக் காப்பாளர் ராம்பிரபு ஆகியோர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, விடுதிக் காப்பாளரான சரண் 18 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் விடுதிக் காப்பாளர் சரண், பள்ளித் தாளாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமைக் காப்பாளர் ராம்பிரபு ஆகியோர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதிக் காப்பாளர் சரண் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றியபோது மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் உள்ளது. இவரால், மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.