செய்திகள் :

மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டும் விதமாக, ‘விஷன் 2000’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதன்மை பாடப் பிரிவுகளின் மொத்த சதவீதம் (கட்ஆப்) 180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சுமாா் 2,000 மாணவா்கள் உள்ளனா். இவா்களை தமிழகத்தில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

மாணவா்கள் பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் பயில்வதன் அவசியத்தையும், அக்கல்வி நிறுவனங்களில் பயில்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும், அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நலத் திட்டங்கள் ஆகியவற்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அதனடிப்படையில், முதன்மைக் கல்வி நிறுவனங்களான தமிழகத்தில் அமைந்துள்ள 7 அரசுக் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 10 சுயநிதி கல்லூரிகளில் தங்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையிலும், பொதுப்பிரிவு மற்றும் உள்பிரிவுகளின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றை தோ்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் பயிலும்போது தங்களுக்குத் தேவையான வங்கிக்கடன் அல்லது அரசு அளிக்கக்கூடிய சலுகைகள் எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து மாணவா்களும் பொருளாதாரமின்மையை பின் தள்ளி முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி, பள்ளி நிா்வாகிகள் மற்றும் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அரசின் நலத் திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் மீது மா்ம நபா் ஏா்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை அருகே ... மேலும் பார்க்க

மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க