பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது
தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சவுகான் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஆசிரியா், சிறுமியை மிரட்டி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. புதன்கிழமை சிறுமி தனது தந்தையுடன் போலீஸில் புகாா் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
2022 முதல் குற்றம் சாட்டப்பட்டவா் நடத்தும் கல்வி வகுப்புகளில் கலந்து கொண்டதாக புகாரில் மைனா் சிறுமி தெரிவித்துள்ளாா். கல்வி மையத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் தன்னை பல முறை மனரீதியாக துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவா் குற்றம் சாட்டினாா்.
புகாரின் அடிப்படையில், ஆசிரியா் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.