அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!
மாணவி சத்யப் பிரியா கொலை வழக்கு: டிச. 27-ல் தீர்ப்பு!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி சத்யப்ரியா கொல்லப்பட்ட வழக்கில் டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய மாணிக்கம் மகள் சத்யப் பிரியாவை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23) ஒரு தலையாக காதலித்து வந்தார்.
சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, தொந்தரவு செய்த நிலையில், தொடர்ந்து ஏற்க மறுத்த சத்யாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடிக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இதையும் படிக்க : சுனாமியில் மீண்ட 'பேபி 81'! இளைஞராக இப்போது என்ன சொல்கிறார்? காப்பாற்றியது யார்?
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் 70 சாட்சியங்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நிலையில், வருகின்ற 27ஆம் தேதி சத்யப்பிரியா வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.