செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை: கனிமொழி எம்.பி. கண்டனம்!

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழகமும் அமைச்சர் கோவி. செழியனும் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தனர்.

இதையும் படிக்க | நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பங்கேற்பு!

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்' என்று பதிவிட்டுள்ளார்.

எச். ராஜாவின் சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பெரியார் சிலை உடைப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாகப்... மேலும் பார்க்க

வடதமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை!

வடதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்... மேலும் பார்க்க

மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது: 40 பேர் காயம்!

ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அட... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன்... மேலும் பார்க்க

சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலை!

திமுக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி புறப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக... மேலும் பார்க்க