செய்திகள் :

மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை பயண அட்டை: அமைச்சர் தொடக்கி வைத்தார்!

post image

மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூலம் சிங்கார சென்னை பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று(ஜன. 6) தொடக்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் - சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இது பற்றி போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலை நோக்கு திட்டமாகும்.

இவ்வட்டையை பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இந்த முயற்சியானது, தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயமாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகளில் ஒன்றாகும்.

மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், ETM (Electronic Ticketing Machine) உபயோகத்தில் உள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் SBI மூலம் கட்டணமின்றி வழங்கப்படும். இவ்வட்டைகள் கோயம்பேடு, பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி,  திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொ.பே, அம்பத்தூர் ஓ.டி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம்,  வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களின் வாயிலாக வழங்கப்படும்.

இதையும் படிக்க: சட்டப்பேரவை மரபை மாற்ற முடியாது! நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி

இவ்வாறு கட்டணமின்றி வழங்கப்படும் அட்டைகளை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள், இணை மேலாண் இயக்குநர் திரு.செ.நடராஜன், அரசு விரைவு போக்குவரத்துக்கு கழக மேலாண் இயக்குநர் திரு.ஆர்.மோகன், பாரத ஸ்டேட் வங்கி உயர் அலுவலர்கள், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!

உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.சொறாஹா கிராமத... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் கண்டுபிடிப்பு!

17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் தற்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிகார் மாநிலத்தின் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால் (வயது 50) எனும் நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சின்ன திரையில் முதல்முறை... கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி!

சின்ன திரையில் முதல்முறையாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் வயதினரையும் கவரும் வகையி... மேலும் பார்க்க

சபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சபரிமலையில் நவம்பர் 16 முதல் தற்போது வரை 40.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக அருஷ் எஸ். நாயர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல... மேலும் பார்க்க

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது!

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலத்தின் பர்த்தானா சந்திப்பில் காவல் துறையினர் வழக்கமான சோதனை நடவடிக்கைகளில் ஈடுப... மேலும் பார்க்க