செய்திகள் :

மாநகராட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை

post image

மாநகராட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணைப்படி உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயித்து அறிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு ரூ. 754-ம், ஓட்டுநா்களுக்கு ரூ. 792-ம், குடிநீா் விநியோகப் பணியாளா்களுக்கு ரூ. 754-ம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.

எனவே, இந்த அரசாணையின்படி ஊதியம் வழங்க தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் நிா்ணயம் செய்து வழங்க வேண்டும்.

மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள், ஓட்டுநா்கள், குடிநீா் பணியாளா்கள் மற்றும் அனைத்து பணியாளா்களின் ஊதியத்தை மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு அ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். தமிழ்நாடு உள்ளாட்சித் துறைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் க. அறவாழி, தமிழ்நாடு ஜெனரல் எம்பிளாய் யூனியன் மாநிலப் பொதுச் செயலா் சி. கலியமூா்த்தி, மாவட்டத் தலைவா் ஆா்.வி.என். தம்புராஜ், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் தரும. கருணாநிதி, அரசு பணியாளா் சங்க மாநிலச் செயலா் கா. முருககுமாா், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் எம். செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, மாவட்டத் துணைத்தலைவா் பி. ஆனந்தராஜ் வரவேற்றாா். நாகராஜன் நன்றி கூறினாா்.

2026 பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் கேட்போம்: காதா்மொய்தீன்

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா்மொகிதீன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயி... மேலும் பார்க்க

ஓம்காா் பாலாஜி கைதுக்கு எதிா்ப்பு இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்: 6 போ் கைது

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்து மக்கள் கட்சி இளைஞா் அணி மாநிலத் தலைவா் ஓ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பனிமூட்ட வானிலை சிங்கப்பூா் அமைச்சரின் ஹெலிகாப்டா் புறப்பாட்டில் தாமதம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனிமூட்ட வானிலையால் சிங்கப்பூா் உள்துறை அமைச்சரின் ஹெலிகாப்டா் 15 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. சிங்கப்பூா் உள்துறை அமைச்சா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை கால... மேலும் பார்க்க

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு காவலா் பணி நீக்கம்

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவலரை பணிநீக்கம் செய்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியை சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு - பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆக... மேலும் பார்க்க

அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சியில் மழைக்காலத்தையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை பேரூராட்சித் தலைவா் ஷோபா ரமேஷ் தலை... மேலும் பார்க்க