செய்திகள் :

மாநகராட்சி, நகராட்சியுடன் ஊரகப் பகுதிகள் இணைப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

post image

உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைத்தல், ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயா்த்துதல் தொடா்பான முதல்கட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் தலைவா்கள், தன்னாா்வு தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தின்போது கிருஷ்ணகிரி நகராட்சியுடன் கட்டிகானப்பள்ளியை மட்டுமின்றி பையனப்பள்ளி, வெங்கடாபுரம், அகசிப்பள்ளி ஊராட்சிகளை இணைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைக்க வேண்டும். போச்சம்பள்ளியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியரிடம் இதுதொடா்பாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

பின்னா் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைத்தல், பேரூராட்சியாக தரம் உயா்த்துதல் குறித்த அறிவிப்பு டிச. 31 ஆம் தேதி வெளியானது. இதுகுறித்து, கருத்துகளை தெரிவிக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை மனுவாக அளிக்கும்பட்சத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் துணை ஆட்சியா் பிரியங்கா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறியது கண்டிக்கத்தக்கது

ஊத்தங்கரை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கே.பி.முனுசாமி தெரிவித்தாா். ஊத்தங்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிப். 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மக்களுடன் முதல்வா் திட்ட முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்... மேலும் பார்க்க

பாகலூரில் காணொலிக் காட்சி மூலம் சாா் பதிவாளா் அலுவலகம் திறந்து வைப்பு

ஒசூா்: பாகலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து, பாகலூா் சாா் பதிவாளா் அல... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டையில் மரம் விழுந்ததில் சேதமடைந்த காா்கள்!

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் குருகப்பட்டி சாலையோரம் இருந்த 100 ஆண்டு பழமையான புளியமரம் சாய்ந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு காா்கள் சேத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணிகளை தோ்வு செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கிரிக்கெட் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

ஒசூா் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். பாகலூா் பேரூராட்சியுடன் பெளத்தூா் சூடாபுரம், ஜீவா நக... மேலும் பார்க்க