மாநகா், புகரின் சில பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
திருச்சி: திருச்சி மாநகா் மற்றும் புகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மின்வாரியத்தின் நகரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் கூறியிருப்பதாவது: திருச்சி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும்
மாநகராட்சிக்குள்பட்ட மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ஆட்சியரக பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, பறவைகள் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் சாலை, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி.
உறையூா் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சிண்டிகேட் வங்கி காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா், தெற்கு வடக்கு, கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லுா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா்கோயில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வநகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா் ராம்ஜி நகா் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.