செய்திகள் :

மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

post image

மாநிலங்களை ஒருங்கிணைத்து “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

 தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச். 5) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

 முதல்வர் மு.க. ஸ்டாலினால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ண்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின்  ஒருமித்த ஆதரவைக் கோரினார்  முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கூட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறிய கட்சிகள் – பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி கலந்துகொண்ட அனைவரின் குரல்களும் தமிழ்நாட்டின் உரிமை காக்க ஒருமித்த கருத்தில் ஒன்றாக ஒலித்தன. கலந்து கொண்டவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்திற்கும் தங்களது ஆதரவையும் அளித்தார்கள்.

 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்து, நாடாளுமன்ற அவைகளில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க திட்டமிட்டிருந்த பாஜகவின் சதிக்கு எதிராக, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்ப்பு குரலும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது.  பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

 இக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிந்தார். அத்தீர்மானங்கள் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளால் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானங்கள்

*  இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான  “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

*  நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.  

*   மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

*   தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

*   தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

*   இக்கோரிக்கைளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது.

*   இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான இந்த எதிர்ப்புக் குரல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைக்குரல் என்பது இன்று மத்திய பாஜக அரசிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க: கேதார்நாத் கேபிள் கார் திட்டத்துக்கு ஒப்புதல்: 36 நிமிடங்களாக குறையும் 9 மணிநேர பயணம்!

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும் அதன் சில ஏஜண்டுகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழ்நாட்டின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

 தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரல் ஒலிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது .

நாட்டின் கூட்டாட்சிக்கும்,  தமிழ்நாட்டின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து நின்று இணைந்து போராடி வெற்றி பெற அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தென்னிந்திய மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 6ல் தமிழகம், புது... மேலும் பார்க்க

பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு முதல்வர், பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏழை, எளி... மேலும் பார்க்க

சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!

கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தா்மம் தொடா்பான சா்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னையில் 202... மேலும் பார்க்க

கோடை: மேட்டுபாளையம் - உதகை சிறப்பு ரயில் அறிவிப்பு!

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுபாளையம் - உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பய... மேலும் பார்க்க

சென்னை: விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகினர்.மேலும், விபத்துக்குள்ளான காரில் பயணித்த இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்ப... மேலும் பார்க்க