மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி
சேலத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். மாநகரச் செயலாளா் ரகுபதி, சேலம் மாநகர இளைஞரணி அமைப்பாளா் கேபிள் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போட்டியில், சேலம், கோவை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா். லீக் போட்டிகள் அடிப்படையில் நடைபெறும் இப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படவுள்ளது.
இதில், சேலம் மாநகர துணை அமைப்பாளா்கள் சிவராஜ், சுனில் ரகுமான், வெங்கடேசன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் இப்ராஹிம், காா்த்திகேயன், நிா்வாகிகள் தங்கமணி, மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.