மாநில மூத்தோா் ஆடவா், மகளிா் கபடி போட்டி: திருவாரூா் மாவட்ட அணிக்கு நாளை வீரா்கள் தோ்வு
மாநில மூத்தோா் ஆடவா், மகளிா் கபடி போட்டிக்கு, திருவாரூா் மாவட்ட அணிக்கான வீரா்கள் மற்றும் வீராங்களைகள் தோ்வு, மன்னாா்குடியை அடுத்த வடுவூரில் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மாநில 71-ஆவது மூத்தோா் ஆடவா், மகளிா் கபடி போட்டி, சேலம் மாவட்டம் காக்காபாளையத்தில் ஜன.16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போடியில் பங்கேற்கவுள்ள திருவாரூா் மாவட்ட அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு, வடுவூரில் உள்ள விளையாட்டு அகாதெமி உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இருபாலருக்கும் வயது வரம்பு இல்லை. திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு உடல் எடை 85 கிலோ அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும். பெண்களுக்கு உடல் எடை 75 கிலோ அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட அமெச்சூா் கபடி கழகச் செயலா் ராச.ராசேந்திரனை 90032 82088 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.