செய்திகள் :

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து!

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த பெ. சண்முகம், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் பொறுப்புகளையும் வகித்தவர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க |மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இதனிடையே திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வீடு திரும்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

விழுப்புரத்தில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 வது மாநாட்டில் தோழர் பெ.சண்முகம் அவர்கள் மாநிலச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக்குழுவும் , 15 பேர் கொண்ட புதிய மாநில செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர்களாக உ.வாசுகி , குணசேகரன், கனகராஜ் , மதுக்கூர் ராமலிங்கம் , சு.வெங்கடேசன், பாலபாரதி , ஜி.சுகுமாறன், சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் , என்.பாண்டி, டி.ரவீந்திரன், முத்துகண்ணன் , அர்ச்சுணன், க.சுவாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.ராம்கார் மாவட்டத்தின் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகில் இன்று (ஜன.8) காலை பள்ளிக்குழந்தைக... மேலும் பார்க்க

அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் உரையன்று நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

எழுத்துப்பிழையால் சிக்கிய கடத்தல் நாடகம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நபர் எழுத்துப்பிழையோடு எழுதிய மிரட்டல் கடித்ததால் சிக்கிக் கொண்டார்.அம்மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

எச்எம்பிவி குறித்து அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி(எச்எம்பிவி வைரஸ்) குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் பேசினார்.சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளனர்.தாணே மாவட்டத்தில் அம்மாநில காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கட... மேலும் பார்க்க

கம்யூனிசம் குறித்த ஆ.ராஜா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

“கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்ட... மேலும் பார்க்க