``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு
மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!
ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு விடுமுறை தினமான ‘ஹோலி’ அன்று (14.03.2025) ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது எனவும் அதேநேரத்தில் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகள் அனைத்தும் அன்று வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்; ரூ. 10,000 கோடி கொடுத்தாலும் வேண்டாம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"மத்திய அரசு விடுமுறை தினமான 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று 'ஹோலி பண்டிகையை' முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
