மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று(பிப். 25) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: நிதீஷ் குமார் - ஜெ.பி. நட்டா ஆலோசனை!
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தில் 31 மக்களவைத் தொகுதிகள்தான் இருக்கும், 8 தொகுதிகளை இழக்க நேரிடும். இது தொடர்பாக அரசியல் கடந்து அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.