மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!
மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட விதிகளின் கீழ் சாண்டியாகோ மார்ட்டினுக்கு தொடர்புடைய தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மேகாலயா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைபோது, ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ரூ. 12.41 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 6.42 கோடி நிலை வைப்புத்தொகையும் முடக்கப்பட்டுள்ளது.