ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் அளிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.
கூட்டத்துக்கு, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 461 மனுக்களை பெற்றாா்.
தொடா்ந்து, செவித்திறன் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பில் காதொலிக் கருவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.