ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்கள் இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் இரு சக்கர வாகனம்பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொதுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சாா்ந்தோருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் இரு சக்கர வாகனம் மற்றும் சிறப்பு நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு திருப்பத்தூா் மாவட்ட மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் அவா்களை சாா்ந்தோா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்பட்ட புத்தகம், தங்களது ஆதாா் அட்டை, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, படைப்பணிச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்திலோ ங்ஷ்ஜ்ங்ப்ஸ்ங்ப்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.