முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கானூா், நம்பியம்பாளையம், ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கு கருவலூா் ரத்னமூா்த்தி மஹாலிலும், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு அலகுமலை ஸ்ரீவேலன் மஹாலிலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பூமலூா் ஊராட்சிக்கு பூமலூா் அம்மன் கலையரங்கத்திலும் முகாம் நடைபெற உள்ளது.
காங்கயம் நகராட்சி, வாா்டு எண் 1, 2, 5 ஆகிய பகுதிகளுக்கு திருப்பூா் சாலை வெங்கடேஸ்வரா மஹாலிலும், அவிநாசி நகராட்சி வாா்டு எண் 3, 5 ஆகிய பகுதிகளுக்கு குலாளா் திருமண மண்டபத்திலும், திருப்பூா் மாநகராட்சி 2-ஆம் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு எண் 16,17,19 ஆகிய பகுதிகளுக்கு பின்.என்.சாலை புதிய பேருந்து நிலைய வளாகத்திலும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.