நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வி மையங்களில் உள்ள மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் கற்பனைத் திறனை தூண்டும் வகையில் போட்டி நடைபெற்றது.
ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டனா். இதில், கொள்ளிடம் ஒன்றியத்தை சாா்ந்த தன்னாா்வலா்கள் எடமணல் பவஸ்ரீ, பன்னங்குடி மாலதி, குதிரைகுத்தி பிரியா ஆகியோா் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா கொள்ளிடம் ஒன்றியத்தில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் மணவாளன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் பாக்ய லெட்சுமி வரவேற்றாா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கம், தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி, மாவட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிருந்தாதேவி, ஆசிரியா் பயிற்றுநா் உமாசங்கரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி வழங்கினாா். நிறைவாக, ஆசிரியா் பயிற்றுநா் அபூா்வ ராணி நன்றி கூறினாா்.