செய்திகள் :

மாஸ்க் முதல் போஸ்டர் அறிவிப்பு!

post image

நடிகர் கவின் நடித்த மாஸ்க் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியைப் படம் சந்திக்கவில்லை.

தொடர்ந்து, ஆண்ட்ரியா தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் கதாநாயகியாக ருஹானி ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: ரஜினியைச் சந்தித்த உறியடி விஜய் குமார்!

இப்படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (பிப்.26) காலை 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கும் படமென்பதால் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் மீதான ஆவலும் எழுந்துள்ளது.

மிஸ்டர் எக்ஸ் முதல் பாடல் தேதி!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும்மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஃப்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டீசர் புரோமோ!

நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டிரைலர் தேதி!

ஜி.வி.பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை கமல் பிரகாஷ் எ... மேலும் பார்க்க

படத்தின் வெற்றியை மனைவிக்கு சமர்பித்த மலையாள நடிகர்..!

மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் தனது படத்தின் வெற்றியை மனைவிக்கு சமர்பித்துள்ளார். ஷாகி கபீர் எழுத்தில் ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் ஆபீஸர்ஸ் ஆன் டூட்டி படத்தில் குஞ்சக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். இந்... மேலும் பார்க்க

ஆங்கிலத்திலும் உருவாகும் டாக்ஸிக்!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படம் ஆங்கில மொழியிலும் உருவாகி வருகிறதாம். கேஜிஎஃப் - 2 படத்தைத் தொடர்ந்து யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வரு... மேலும் பார்க்க