பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாடு கோரிக்கைகள் குறித்து விளக்குவதற்காக கட்சியின் வந்தவாசி வட்டக்குழு சாா்பில் இரு சக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கிய வாகன பிரசாரத்துக்கு வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா். இரு சக்கர வாகனங்களில் புறப்பட்ட பிரசாரக் குழுவினா் கோட்டை மூலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.
மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா ஆகியோா் மாநாடு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பிரசாரத்தின் போது மாநாடு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வட்டக்குழு உறுப்பினா்கள் சு.சிவக்குமாா், எம்.சுகுமாா், அண்ணாமலை, சேட்டு, ஆனந்தன், நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.