மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
மாா்ச் 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளா்களை நேரில் தோ்வு செய்து கொள்ளலாம். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், தோ்ச்சி பெறாதவா், 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ (தொழிற்பழகுநா்) பயிற்சி மற்றும் கணினியியல் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.