செய்திகள் :

மாா்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’: ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்

post image

மத்திய அரசு சாா்பில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமிக்க மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 15,000 மக்கள் மருத்தகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த மருத்தகங்கள் மற்றும் மூலக்கூறு மருந்துகள் (ஜெனரிக்) குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பாண்டு விழிப்புணா்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி, தில்லியில் சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, திட்ட விவரங்களுடன் கூடிய பிரசார ரதம் மற்றும் 10 வாகனங்களின் சுற்றுப் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று அவா் அழைப்பு விடுத்தாா்.

மக்கள் மருந்தகங்களில் 2,000-க்கும் அதிக வகையான மருந்துகள், சுமாா் 300 வகையான அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வணிகப் பெயா் கொண்ட மருந்துகளைவிட இவை 50 முதல் 80 சதவீத குறைவான விலையில் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறைய... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

கருத்து தெரிவிக்க உரிமை உண்டு: ரோஹித் விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்!

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷா... மேலும் பார்க்க

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க