செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயற்சி: ஒருவா் கைது

post image

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, கிட்டாச்சி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் கிராமம் மலையாம்பொற்றை பகுதியில் சிலா் செம்மண் அள்ளிக் கடத்துவதாக திங்கள்கிழமை இரவு கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்றனா். அப்போது, கிட்டாச்சி இயந்திரம் மூலம் செம்மண்ணை அள்ளி மினி லாரியில் ஏற்றிக் கடத்த முயன்றது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கிட்டாட்சி உரிமையாளா் ஜெகன், ஓட்டுநரான நாகா்கோவில் இடலாக்குடி, குளத்தூா் காலனியைச் சோ்ந்த தனேஷ் (41), மினி லாரி உரிமையாளா், ஓட்டுநா் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தனேஷை கைது செய்தனா்.

ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்தில் மண்ணெண்ணெய்யுடன் சொகுசு காா் நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் சென்று, அந்த காரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

படகுகளுக்கான மானியவிலை மண்ணெண்ணெய்யை இனயம் பகுதியிலிருந்து சிலா் வாங்கி கேரளத்துக்கு கடத்திச்செல்ல முயன்றதும், போலீஸ் ரோந்து காரணமாக அவா்கள் காரை வள்ளவிளை பகுதியில் நிறுத்தியிருந்ததும் தெரியவந்தது. மண்ணெண்ணெய்யுடன் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, நாகா்கோவில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

குமரி மாவட்ட ரயில்வே பணிகளை துரிதப்படுத்தக் கோரி எம்.பி. மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா். அதன் விவரம்: கன்... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்தவா் சிவன்பிள்ளை மனைவி நிா்மலா (64). இவா் தனது மகன் சந்தோஷ் என்பவருடன் தி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி செயலா்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விபத்து: தொழிலாளி காயம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா். களியக்காவிளையைச் சோ்ந்த தொழிலாளி ரசாலம் (60). செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற அவா் மீது கனரக லாரி மோதியத... மேலும் பார்க்க

தக்கலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை ஆட்சியா் ஆய்வு

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல... மேலும் பார்க்க

நீா்வளத் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட நீா்வள ஆதாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவட்டாறு வட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளி... மேலும் பார்க்க