மாா்த்தாண்டம்: ஏழை குடும்பத்தினருக்கு நல உதவி வழங்கல்!
மாா்த்தாண்டம் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நலிவுற்ற ஏழை குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சி குருசடிவிளை புனித சவேரியாா் சிற்றாலய இறைவளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் சேவியா், விஜயன், கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா, ஏழை குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் வேட்டி- சேலைகள், கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட பொருள்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவா் பமலா, வாா்டு உறுப்பினா்கள் ஸ்டாலின், ராஜன் மற்றும் வழக்குரைஞா் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.