செய்திகள் :

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு - யார் இவர்?

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3-ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த மாநாடு இன்றுடன் நிறைவடைந்தது. முதல்  நாளில் தியாகிகளுக்கு அஞ்சலி, செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று, தகுதிகாண் குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல், புதிய மாநிலக் குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு, அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் போன்றவை தேர்வு செய்யப்பட்டன. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த கே. பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவு பெற்றதையடுத்து, புதிய தலைவராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டு மேடையில்

மத்திய செயற்கு குழு உறுப்பினராக இருக்கும் பெ.சண்முகம், இதற்கு முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும், கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் மாநில விவசாய சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2023-ம் ஆண்டு தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் விருதை பெற்றிருக்கும் இவர், வாச்சாத்தி பழங்குடி மக்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை இறுதி வரை உறுதியாக நடத்தியவர். வழக்கை தொடுத்ததுடன், தீர்ப்பு வரும் வரை பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் இருந்தவர். சமரசமின்றி போராடி வரும் பெ.சண்முகத்துக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க

"சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது"- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், ``போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்பட... மேலும் பார்க்க

IT RAID; டெல்லி Twist - அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க* - டங்ஸ்டன் விவகாரம்... விவசாயிகள் பேரணி!* - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்... மேலும் பார்க்க

Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

பா.ம.க போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, தி.மு.க போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெர... மேலும் பார்க்க