செய்திகள் :

மா.செ.கூட்டத்தில் அன்புமணி; `மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்' - யூ-டர்ன் போடும் ராமதாஸ்!

post image

நேற்று செய்தியாளரை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், '2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்' என்று கூறியிருந்தார்.

ஆனால், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ், தன் நிலைப்பாட்டை மாற்றி பேசியுள்ளார்.

ராமதாஸ் கூறியதாவது, "2026 தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு பாமகவின் தலைவர் பதவியை தருகிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால், என் மூச்சு இருக்கும் வரைக்கும் நான் தான் தலைவராகத் தொடர்வேன். அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, அவருக்கு நான் தலைவர் பதவியை வழங்கமாட்டேன்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

என் உத்தரவுப்படி, அன்புமணி செயல் தலைவராக இருப்பதாக சொன்னால் எனக்கு மகிழ்ச்சி. அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் கூடுகிறது. மேடையில் மைக்கை தூக்கி அடிக்கிறார். தந்தையையும் தாயையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அவரது அம்மாவை பாட்டிலால் தாக்குகிறார்."

நேற்று அன்புமணிக்கு தலைவர் பதவியை தருவேன் என்று கூறிய நிலையில், இன்று மாற்றியிருப்பது கட்சியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்த உள்கட்சி பூசல் பாமகவிற்கு கூட்டணி பேச்சுவார்த்தையின் பின்னடைவை தரலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நேற்றே கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன் என்று கூறிய நிலையில், இன்று வாழ்நாள் முழுவதும் தானே தலைவர் என்று அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.

இன்னொரு பக்கத்தில் அன்புமணி தலைமையில் சென்னை பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இர... மேலும் பார்க்க

``வரும் தேர்தலில் திருச்சியில் போட்டி; நடிகர் விஜய் மனசு..'' - திருநாவுக்கரசர் தடாலடி

ராகுல் காந்தி பிறந்த நாள்: வேலைவாய்ப்பு முகாம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச... மேலும் பார்க்க

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.டி.வி.எஸ் டோல்கேட் பக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத்தேவைப... மேலும் பார்க்க

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இர... மேலும் பார்க்க

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க