அதிமுக: "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" - என்ன...
மிகக்குறைந்த வயதில் எம்மி விருதை வென்ற அடோலசென்ஸ் நடிகர்!
நடிகர் ஓவன் கூப்பர் மிகக்குறைந்த வயதிலேயே எம்மி விருதை வென்று அசத்தியுள்ளார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் தி அடோலசென்ஸ். குழந்தை வளர்ப்பு மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை 4 எபிசோடுகளில் பேசிய இத்தொடருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் கிடைத்தன.
ஆச்சரியப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த தொடரும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதால் அசாத்திய உருவாக்கம் என்கிற புகழையும் பெற்றது.
தொடரின் மையக் கதாபாத்திரமாக நடித்த நடிகர் ஓவன் கூப்பர் தன் முதிர்ச்சியான நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருப்பார். முக்கியமாக, உளவியல் நிபுணருடன் பேசும் காட்சியில் தொடர் வசனங்களைப் பேசிவிட்டு மேஜையில் ஓங்கித்தட்டும் காட்சி புல்லரிப்பைக் கொடுத்தது.

இந்த நிலையில், இந்தாண்டு எம்மி விருதுகள் நிகழ்வில் அடொலசென்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது 15 வயதான ஓபன் கூப்பருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதின் மூலம், மிக இளவயதிலேயே எம்மி விருதை வென்ற ஆண் என்கிற சாதனையையும் படைத்துள்ளார்.
நிகழ்வில் பேசிய ஓவன், “நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நான் ஒன்றுமில்லாமல் இருந்தேன். இப்போது, எம்மி கிடைத்திருக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. என் பெற்றோருக்கும் அடோலசென்ஸ் குழுவினருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்காக ஓபனின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆத்மாவே போ... சூ ஃப்ரம் சோ - திரை விமர்சனம்!