ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆடுகளுக்கு இலை பறித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளத்தைச் சோ்ந்த சீனி மகன் முத்து (42). இவா் ஆடுகள் வளா்த்து வந்தாா். ஆடுகளை தினசரி மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற அவா் முண்டுவேலம்பட்டி நத்தப்பட்டியில் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஆடுகளுக்கு இலை பறித்தாா்.
அப்போது, மரத்தின் அருகே சென்ற உயா் மின் அழுத்த கம்பியில் முத்து உடல் உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.