மின்னல் முரளி நினைவுகளைப் பகிர்ந்த குரு சோமசுந்தரம்!
மின்னல் முரளி படத்தின் 3ஆவது ஆண்டு நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் நடிகர் குரு சோமசுந்தரம்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த ‘மின்னல் முரளி’ படம் 2021இல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதில் வில்லனாக நடித்த தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம் கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு அவர் மலையாள படங்களில் நடிக்க அதன் மொழியைக் கற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் குறித்து டோவினோ திரைக்கதைக்காக காத்திருப்பதாகக் கூறினார்.
இந்த நிலையில் குரு சோமசுந்தரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு கூறியதாவது:
மின்னல் முரளியின் மூன்றாவது ஆண்டு. இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியதிற்கும் நல்ல நினைவுகளை ஏற்படுத்தியயதிற்கும் அனைத்து கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப பிரிவுனர்களுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லாலில் பரோஸ் படத்திலும் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை (டிச.25) வெளியாகிறது.