செய்திகள் :

மின் மாற்றி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதா..?: அமைச்சர் செந்தில் பாலாஜி

post image

கோவை: மின்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும், கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதில் எந்தவித தலையீடுகளோ, தவறுகளோ நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ரூ. 9.67 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் மாதிரி பள்ளி விடுதி கட்டடம் அமைய உள்ள இடங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், முதல்வரின் ஆணைக்கிணங்க ரூ.9.67 கோடி மதிப்பில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருப்பதாக கூறினார்.

கோவை மாநகராட்சியை பொருத்தவரை ஏறத்தாழ ரூ.935 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும்,இன்று அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறினார். மேலும், கோவையின் வளர்ச்சிக்காக கடந்த முறை கோவைக்கு வந்த முதல்வர், கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ரூ.200 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளதாகவும், சாலைகள் அமைப்பதற்கான சாலைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் அரசின் ஒப்புதலை பெற்று அந்தப் பணிகளும் தொடங்க இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிக்க |கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்: அமைச்சர் எஸ்.ரகுபதி

சமீபத்தில் கோவைக்கு வருகை தந்த முதல்வர், ஏற்கனவே தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை அமைப்பதற்கான பணிகளின் ஒப்புதல் வருவதற்கு முன்பே பாதாள சாக்கடை பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றார். விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் தொடங்கும் என்றார்.

மின் மாற்றி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக வெளியான புகார் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மின்சாரத் துறையின் சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்படுவதாகவும்,அதற்காக ஒரு குழு இருப்பதாகவும் அந்த குழுதான் விலைப்பட்டியலை நிர்ணயம் செய்து, விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதை தீர்மானித்து அதற்கான உத்தரவுகளை வழங்குவதாக கூறினார்.

மேலும் கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்பொழுதும் பின்பற்றப்படுகிறது. இதில் எந்தவித தலையீடுகளோ, தவறுகளோ நடக்கவில்லைல்லை என்று அவர் கூறினார்.

3 மணி நேரத்தில் 362 மி.மீ... ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!

ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுட... மேலும் பார்க்க

அமரன்: வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல்!

அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெர... மேலும் பார்க்க

மெட்டி ஒலி இயக்குநரின் புதிய தொடர் படப்பிடிப்பு தொடக்கம்!

மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் இயக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.2002ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து மக்... மேலும் பார்க்க

சாக்கு மூட்டையில் தலித் பெண்ணின் உடல்: பாஜகவுக்கு ஆதரவளித்ததால் கொலையா?

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹல் தொகுதியில் 23 வயது பிற்படுத்தப்பட்ட பெண்ணின் சடலம், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்ஹல் தொகுதியில் இன்று(நவ. 20) இடைத்தேர்தல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளடக்கிய 14 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைக... மேலும் பார்க்க

‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்: பார்த்திபன்

‘பிரிவு’ என்ற முடிவை மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக நேற்று தனித்தனியாக அறிவிப்பு வெளியான நிலையில்... மேலும் பார்க்க