செய்திகள் :

மிஷ்கின் பேச்சால் சங்கடத்திற்கு ஆளான வெற்றி மாறன்!

post image

பாட்டல் ராதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் பேசிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், மிஷ்கின், லிங்குசாமி, பா. இரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: ஓடிடியில் விடுதலை - 2!

நிகழ்வில் பேசியவர்கள் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார்.

பேச்சின் இடையே, பலமுறை தகாத வார்த்தைகளையும் பிறரைக் காயப்படுத்தும் தொனியிலும் பேசியது சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வெற்றி மாறன், லிங்குசாமி உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது அவர்களின் முகத்தில் தெரிந்தது.

மிஷ்கின் பேசப்பேச இயக்குநர் லிங்குசாமி மேடையிலிருந்து கீழே இறங்கி வெளியே சென்றார். என்ன காரணம் எனத் தெரியவில்லை. அதேநேரம், சில இடங்களில் சிரித்தாலும் மிஷ்கின் பேச்சை வெற்றி மாறன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

பாட்டல் ராதா நிகழ்வில் மிஷ்கின் பேச்சைக் கேட்டவர்கள், வெளிப்படையாகப் பேசுகிறேன் என்கிற நினைப்பில் அவை நாகரீகத்தை மிஷ்கின் மீறுகிறார் என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

கௌதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம்!

நடிகர் ரவி மோகனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கவனம் ஈர்த்துள்... மேலும் பார்க்க

விஷாலின் உடல்நல பாதிப்புக்கு நான் காரணமா? பாலா விளக்கம்!

நடிகர் விஷாலின் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து இயக்குநர் பாலா கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் விஷால் சில நாள்களுக்கு முன் மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது, அவரால் சரி... மேலும் பார்க்க

மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை வசூல் நிலவரம்!

மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த படங்களில் மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை ஆகிய 3 படங்... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்... தற்கொலைக்கு முயற்சித்தேன்: பா. இரஞ்சித்

இயக்குநர் பா. இரஞ்சித் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த த... மேலும் பார்க்க

ஓடிடியில் விடுதலை - 2!

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் கடந்த டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இயக... மேலும் பார்க்க