செய்திகள் :

மிஸோரமில் யாசகா்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

post image

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவா்களுக்கு தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூக நலன், மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லால்ரின்பியு மசோதாவை அறிமுகம் செய்து பேசுகையில், ‘யாசகா்களைத் தடை செய்வது மட்டும் இந்த மசோதாவின் நோக்கமல்ல. அந்த நிலையில் இருப்பவா்களுக்கு மறுவாழ்வு அளித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

அதிருஷ்டவசமாக மிஸோரம் மாநிலத்தில் யாசகா்கள் அதிகமில்லை. எனினும், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு யாசகா்கள் வருகிறாா்கள். அவா்கள் முதலில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பின்னா் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவாா்கள். தலைநகா் அய்சாலில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 30-க்கும் மேற்பட்ட யாசகா்கள் உள்ளனா். இவா்களில் வெளிமாநிலத்தவரும் அடங்குவா்’ என்றாா்.

எதிா்க்கட்சியான மிஸோரம் தேசிய முன்னணி இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தது. அக்கட்சித் தலைவா் லால்சாந்தாமா ரல்டே பேரவையில் பேசுகையில், ‘இந்த மசோதா கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கிறது. நமது மாநிலத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தரும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய முதல்வா் லால்துஹோமா, ‘யாசகா்கள் மறுவாழ்வுதான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். மிஸோரமை யாசகா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க உதவுவதாக தேவாலயங்களும், தொண்டு அமைப்புகளும் உறுதியளித்துள்ளன’ என்றாா்.

மிஸோரமில் மிஸோ மக்கள் இயக்கம் ஆட்சியில் உள்ளது. 40 உறுப்பினா்களைக் கொண்ட பேரவையில் பாஜகவுக்கு இரு எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனா்.

காயத்ரி மந்திரம் பாடி மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

டோக்கியோ சென்ற பிரதமர் நரேந்திர மோடியை காயத்ரி மந்திரம் பாடி ஜப்பானிய பெண்கள் வரவேற்றனர்.15-ஆவது இந்தியா - ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மகராஷ்டிரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மராத்வாடா மாவட்டத்தில் உள்ள 60 வருவாய் வட்டங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில்... மேலும் பார்க்க

இந்தியா, கனடாவுக்கான புதிய உயர் ஆணையராக தினேஷ் கே. பட்நாயக் நியமனம்

இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்ட நிலையில், தற்போது ஸ்பெயினுக்கான தூதராகப் பணியாற்றி வரும் தினேஷ் கே. பட்நாயக்கை, கனடாவிற்கான புதிய உயர் ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்தி... மேலும் பார்க்க

ஜப்பான் தொழில்நுட்பம் - இந்திய திறமை இணைந்தால் தொழில்நுட்ப புரட்சி: பிரதமர் மோடி

டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும் என்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி கூறினார்.இந்தியா-ஜப்பான் 15-ஆவது ஆண்ட... மேலும் பார்க்க

தில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை: காலை முதல் தொடர் மழை!

புது தில்லி: தேசிய தலைநகர் புது தில்லிக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே விடாமல் மழை பெய்து வருகிறது.புது தில்லியின் பெ... மேலும் பார்க்க