செய்திகள் :

முகலாயப் பேரரசரின் சந்ததியினர் ரிக்‌ஷா இழுக்கின்றனர்! யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

post image

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் ரிக்‌ஷா இழுப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, ``முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் சந்ததியினர் கொல்கத்தாவுக்கு அருகில் ரிக்ஷா இழுப்பதாக சிலர் என்னிடம் கூறினர். ஔரங்கசீப் தெய்வீகத்தை மீறி, கோயில்களையோ மத ஆலயங்களுக்கு எதிரான வேண்டத்தகாத செயல்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அவரது சந்ததியினர், இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் `உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தைக் கொண்டு வந்தனர். நெருக்கடியான காலங்களில் அனைத்து பிரிவினருக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரே மதம், சனாதன தர்மம் மட்டுமே. இருப்பினும், இந்து மதத்தினருக்கும் பதிலுக்கு அதே முறையிலான உணர்வு வழங்கப்பட்டதா?

இதையும் படிக்க:வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் இந்துக்கள் எதிர்கொள்ளும் சவால்களே சான்றாகும். பல நூற்றாண்டுகளாக இந்து கோயில்களுக்கு எதிரான நடவடிக்கையே மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டன. சனாதனம் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

17 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், ஒரு திறமையான பேரரசராகக் கருதப்பட்டாலும், அவரது மதக் கொள்கைகளையும், ஆட்சிக்காலத்தில் கோயில்கள் அழிக்கப்பட்டதும் அவ்வப்போது விமர்சனத்துக்கு வந்துபோகிறது.

குளிா்கால கூட்டத்தொடா்: மக்களவை 54.5%, மாநிலங்களவை 40% ஆக்கபூா்வமாக செயல்பட்டன

குளிா்கால கூட்டத்தொடரில் மக்களவை 54.5 சதவீதமும், மாநிலங்களவை 40 சதவீதமும் ஆக்கபூா்வமாக செயல்பட்டுள்ளன. இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த நவ.25-... மேலும் பார்க்க

ஆந்திர தலைநகரை கட்டமைக்க ரூ. 6,800 கோடி கடன் உலக வங்கி ஒப்புதல்

ஆந்திர மாநில தலைநகா் அமராவதியைக் கட்டமைக்க 800 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.6,800 கோடி) கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடா்பாக உலக வங்கி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூற... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று குவைத் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா். பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த... மேலும் பார்க்க

2 ஸ்டெல்த் போா்க் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

ஸ்டெல்த் தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட 2 போா்க் கப்பல்கள் இந்திய கடற்படையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மத்திய அரசு ஒப்புதல் அளித்த 17ஏ ரக திட்டத்தின் கீழ், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ம... மேலும் பார்க்க

ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள ... மேலும் பார்க்க

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிக பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்... மேலும் பார்க்க