செய்திகள் :

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

post image

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர்.

காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜாஃபரின் சுவரோவியத்தின் மீது இன்று (ஏப்.18) ஹிந்து ராக்‌ஷா தால் எனும் இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்பு நிற ஸ்பேர் பெயிண்ட் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாங்கள் சேதப்படுத்தியது முகலாய மன்னரான ஔரங்கசீப்பின் சுவரோவியம் என அந்த வலதுசாரி அமைப்பின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்நகரத்தின் சுவர்களை ஓவியம் வரைந்து அழகுப்படுத்தும் வேலைகளைச் செய்து வரும் திஷா ஃபவுண்டேஷன் எனும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த உதித்தா தியாகி என்பவர் அந்த ஓவியம் குறித்து விளக்கமளித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தானும் தங்களது நிறுவனமும் எந்தவொரு முகலாய மன்னரையும் தற்போது புகழவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க