செய்திகள் :

முதல்வரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்!

post image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது 47-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். மேலும், தனது பிறந்தநாளையொட்டி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க..: தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம். எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க..: கனமழை எதிரொலி: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

நடிகர் கமல் ஹாசன், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மட்டுமின்றி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மக்களே உஷார்: 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ம... மேலும் பார்க்க

சென்னையை நெருங்கும் தாழ்வு மண்டலம்: 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புதன்கிழமை... மேலும் பார்க்க

ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ஆடு வெட்டி பூஜை.. அதிர்ச்சி தரும் காரணம்!

சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி, ஆடு வெட்டி முப்பூசை செய்து காவல்துறையினர் வழிபாடு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சேலம் மாவட்டம் ஆ... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை, கடலூர், நாகையில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் நவ. 29ஆம் தேதி கடற்கரையை ஒட்டி வடமேற்காக நகரும் என்று சென... மேலும் பார்க்க

மர்மதேசமாகும் மகாராஷ்டிரம்: முதல்வராகாவிட்டால் ஷிண்டேவின் பிளான் பி?

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், தன்னை முதல்வராக தேர்ந்தெடுக்காவிட்டால், பிளான் பி ஒன்றை முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே வைத்த... மேலும் பார்க்க

புயல் சின்னம் எப்போது எங்கே கரையை கடக்கலாம்?

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கி மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.வங்கக் கடலில் உருவ... மேலும் பார்க்க