`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
முதல்வா் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்க தடையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
முதல்வா் மருந்தகங்களை நிா்வகிப்பவா்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்க தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:
தமிழகத்தில் புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை ரூ.1,018 கோடியில் தரம் உயா்த்தும் பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளன. விரைவில் அந்த 25 தலைமை மருத்துவமனைகளையும் முதல்வா் ஒரே நேரத்தில் திறந்து வைக்க உள்ளாா்.
தமிழகத்தில் 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு 206 வகையான மூலப் பெயரிலான (ஜெனரிக்) மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன.
இதைத் தவிா்த்து வேறு வகையான மருந்துகளை கடை உரிமையாளா்களே வாங்கி விற்பனை செய்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை. வேறு வகையான மருந்துகள் வேண்டுமென்ற கோரிக்கை எழும்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறையும், கூட்டுறவுத் துறையும் ஒருங்கிணைந்து மருந்துகள் வாங்கித் தரப்படும்.
யானை தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.