செய்திகள் :

முதல்வா் மருந்தகம் அமைக்க ஆட்சியா் அழைப்பு

post image

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: முதற்கட்டமாக 1000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அண்மையில் தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி. பாா்ம், டி. பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதுதலுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது, குடிநீா் வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்துக்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப்பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ. 3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

தொழில்முனைவோருக்கு முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகை ரூ. 1.50 லட்சம் விடுவிக்கப்படும்.

முதல்வா் மருந்தகம் அமைக்க தோ்வு செய்யப்படும் தொழில்முனைவோா் முதல்வா் மருந்தகத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிா்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு, இறுதி கட்ட மானியம் ரூ. 1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி விசா வழங்கியவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி விவசாயிடம் ரூ. 30 லட்சத்தை பெற்றுக் கொண்டு போலி விசா வழங்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(... மேலும் பார்க்க

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூா் அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சந்நதியிலுள்ள பிரத... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, ப... மேலும் பார்க்க

கூத்தூா், அரியலூா் பகுதிகளில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூா் மேற்கு பகுதி, பிஆா் நல்லூா், ஜெமீன் பேரையூா், கூ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வெண்மான்கொண்டான் கிராமத்தைச... மேலும் பார்க்க

அரியலூரில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், யுஜிசி 2025-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க