செய்திகள் :

முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

post image

பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக 474 ரன்களை ஆஸ்திரேலியா அணி குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இதையும் படிக்க : மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 474 ரன்கள் குவித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 140 ரன்களை குவித்தார். மேலும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர்.

இந்திய பந்துவீச்சாளர்களின் அதிகபட்சமாக பும்ரா 4, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நம்பமுடியாத சதம்... நிதீஷ் ரெட்டியை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர்!

நிதீஷ் ரெட்டியின் சதம் நம்பமுடியாததாக இருந்ததாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்... மேலும் பார்க்க

கோலியும் கான்ஸ்டாஸும் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்..!

மோதலில் ஈடுபட்ட கோலியும் கான்ஸ்டாஸும் இணைந்து புகைப்படம் வெளியிடலாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் கிளார்க் கூறியுள்ளார். டிச.26ஆம் தேதி மெல்போர்னில் துவங்கிய இந்தியா - ஆஸி.க்கு இடையேயான... மேலும் பார்க்க

ஸ்டார்க்கின் ஆளுமை குறித்து வியந்த ஸ்காட் போலாண்ட்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் போலாண்ட் தாங்கள் (ஆஸி. அணி) வலுவான முன்னிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது பிஜிடி போட்டியில் இந்திய அணி 3ஆம் நாள் முடிவில் 358/9 ரன்கள்... மேலும் பார்க்க

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொ... மேலும் பார்க்க

நட்சத்திர வீரரான நிதீஷ்..! பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறங்க ஆதரவு!

இந்தியாவின் நட்சத்திர வீரராக நிதீஷ் ரெட்டி இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து நிதீஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 3ஆம் நாள் மு... மேலும் பார்க்க

புஷ்பா பாணியில் கொண்டாடிய நிதீஷ் குமார் ரெட்டி!

இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது அரைசதத்தினை புஷ்பா பட பாணியில் கொண்டாடியது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3ஆம் நா... மேலும் பார்க்க