Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
முதல் முறையாக டி20 தொடருக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இருதரப்பு தொடருக்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன் பின், டி20 தொடர் தொடங்குகிறது.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர்!
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடருக்காக இந்திய அணி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வங்கதேசம் சென்றடையவுள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
டி20 போட்டிகள் ஆகஸ்ட் 26, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் கடைசி இரண்டு டி20 போட்டிகள் மிர்பூரில் நடைபெறவுள்ளன. மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளன.
India will head to Bangladesh for a white-ball tour this August ️
— ICC (@ICC) April 15, 2025
Full schedule https://t.co/6aUUPBYo91
டி20 தொடரில் விளையாடுவதற்காக முதல் முறையாக இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தொடருக்காக மட்டும் இந்திய அணி முதல் முறையாக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.