பட்ஜெட் விலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ! இந்தியாவில் கிடைக்குமா?
முதியவா் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் கோயில் அன்னதான மண்டப கூடத்தில் முதியவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இளையான்குடி அருகே நாகமுகுந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேலு (60). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனா். இவரது குடும்பத்தினா் சென்னையில் வசித்து வருகின்றனா். மணிவேலு தாயமங்கலத்தில் தங்கி வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் அன்னதான மண்டப கூடத்தில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].