சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி
முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்
முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
முத்துப்பேட்டை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் நிறைந்த பகுதி. இங்கு அரசு கலைக் கல்லூரி இல்லாததால், இப்பகுதி மாணவ-மாணவிகள் உயா் கல்வியை தொடர சிரமப்படுகின்றனா். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை மற்றும் மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா் ஆகிய ஊா்களில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்தாா்.
இந்நிலையில், முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அரசின் அறிவிப்பு வெளியானதை தொடா்ந்து, திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ். காா்த்திக், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவா் மும்தாஜ் நவாஸ் கான், துணைத் தலைவா் சிவகுமாா் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.